Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2021 19:04:27 Hours

இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இயேசுவின் ஆசி வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள்

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆசி வேண்டும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று (30) இடம்பெற்றதுடன், இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார்.

இராணுவ கிறிஸ்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் அதன் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பூஜை மற்றும் ஆராதணைகள் வண. பேராசிரியர் அண்டனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. மேற்படி பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளுக்கு வருகை தந்த பிரதம அதிதியினை வரவேற்றதனையடுத்து இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் லசந்த றொட்றீகோ வரவேற்புரையாற்றினார்.

இயேசுவின் மகத்துவத்தையும் அவருடைய தெய்வீக ஆசீர்வாதங்களையும் பற்றி பேசும் அறிமுகத்திற்குப் பிறகு இராணுவ கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு நன்றி வழங்கும் விழா நடைபெற்றது.

அருட் தந்தை ஹெஷான் டி சில்வா பெப்டிஸ்ட் சங்கம், இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஆகியவற்றிக்கு அறிமுகக் கருத்துக்களை வழங்கினார், இராணுவ ஆண்டுவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரையும் பாடல்களுக்கு அழைத்தார். பின்னர் இராணுவத் தளபதி மற்றும் அனைத்து சேவை உறுப்பினர்கள், இராணுவக் கொடி மற்றும் அனைத்து படைப்பிரிவுக் கொடிகள் மீதும் படையினர் மரியாதையுடன் உள்ளே அழைத்து வந்து புனிதப் பகுதியில் உள்ள பலிபீடத்தின் அடிவாரத்தில் ஆசி வழங்கப்பட்டது.

அதே சமயத்தில், போர்க்களங்களிலும் மற்ற இடங்களிலும் இறந்த அனைத்து போர்வீரர்களின் ஆத்மாக்களுக்காக நித்திய அமைக்காய் பிரார்த்தனை செய்யப்பட்டது, அதே நேரத்தில் காயமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும், புனர்வாழ்வு மற்றும் மீட்பு நிலையில் உள்ள சேவை செய்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் சுகம வேண்டி பிராத்தனைகளும் செய்யப்பட்டன.

பம்பலப்பிட்டி புனித மேரி தேவாலயம், பெப்டிஸ்ட் தேவாலயம், மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் ஆங்கிலிகன் தேவாலயத்தை சேர்ந்த மதகுருமார்கள் ஆராதணைகள் வழங்கினர் மற்றும் இராணுவத்தின் தோல்வியற்ற சேவைகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கினர்.

ஜெனரல் சவேந்திர சில்வா சிறப்பு சேவையின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு புனித ஆலயத்தின் வளர்ச்சிக்கு நிதி நன்கொடை அளித்தார். ஜெனரல் (ஓய்வு), தயா ரத்நாயக்க , இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், இராணுவ கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு ஆராதணையில் கலந்து கொண்டனர்.