27th September 2021 06:00:18 Hours
கொவிட் – 19 நோயாளிகளின் அவரச சிகிச்சைகளுக்கான தேவைகளை கருத்திற் கொண்டு அனுராதபுர இராணுவ வைத்தியசாலைக்கு கனடாவில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவரால் சுவரில் பொருத்தக்கூடிய ஐந்து ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் ஐந்து ஒட்சிசன் சிலிண்டர் ரெகுலேட்டர்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
கனடாவில் வசிக்கும் வைத்தியர் திருமதி சித்திரலேகா அபேசிங்க, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 10 மருத்துவ உபகரணங்களும் இராணுவ வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரன, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருந்து வைத்திய நிபுணர் கேணல் சம்பிக்க அபேசிங்க, கொழும்பு இராணுவ வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை நிபுணர் பிரிகேடியர் வைத்தியர் கீத்திகா ஜயவீர ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது அனுராதபுர இராணுவ வைத்தியசாலையை பிரதிநிதுவப்படுத்தி கெப்டன் டிஎஸ் பண்டார கலந்துகொண்டிருந்தார்.