Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2021 21:54:36 Hours

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் தலதா மாளிகையில் வழிபாடுகளுடன் ஆரம்பம்

அர்ப்பணிப்பு மற்றும் அன்போடு கூடிய சேவைக்காக 'தேசத்தின் பாதுகாவலர்கள்' என போற்றப்படும் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு விழாவை (அக்டோபர் 10) முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் திங்கள்கிழமை (27) மாலை ஆரம்பமாகின. அதற்கமைய புனித தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகை (புனித தந்ததாது பாதுகாப்படும் தலம்) வளாகத்தில் புத்தர் பூஜை, கொடி-ஆசிர்வாதம் என்பவற்றோடு, பிக்குகளுக்கு “கிலன்பஸ” வழங்குதல் மற்றும் புத்த பெருமான் மற்றும் அவரது சீடர்களின் உயிர்கள் உள்ளதென நம்பப்படும் புனித நினைவுச் சின்னங்களான 'ஷேரேரிகா', 'பரிபோகிகா' 'உத்தேசிகா' என்பவைக்கான ஆராதனைகளும் இடம்பெற்றன.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் 23 வது இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைகளுக்கமைய குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வின் போது, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், கொவிட் – 19 தொற்றுநோய் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழித்து கட்டுவதற்காக ஆசி வேண்டி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனையடுத்து இன்று (27) மாலை இருப்பு மற்றும் நிலைப்பு, அமைப்பின் கௌரவம் மற்றும் அனைத்தையும் குறிக்கும் வகையிலான இலங்கை இராணுவ தொண்டர் படையணி உள்ளடங்களாக அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பராமரிப்பு பகுதிகள், பாதுகாப்பு படைப்பிரிவுகள், பிரிகேட் தலைமையகங்கள் , பயிற்சி நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படை பிரிவுகள் என்பவற்றின் கொடிகள் மற்றும் இராணுவக் கொடி மரியாதைக்குரிய வகையில் ஒவ்வொரு அலகுகளிலும் சேவை செய்யும் உறுப்பினர்கள், ஒவ்வொரு படைப் பிரிவு அதிகாரிகளால் தலதா மாலிகையின் உயர் பீட அறை மற்றும் 'பதிரிப்புவ' (எண்கோணம்) அறைகளுக்கு பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் வண்ணமயமான அணிவகுப்பில் எடுத்துச் செல்லப்பட்டன.

இராணுவத் தளபதி இலங்கை இராணுவக் கொடியை ஆசீர்வாதங்களுக்காக எடுத்துச் சென்றார். கொடிகள் பின்னர் மேல் அறையில் 'தேவவ'வுக்குப் பொறுப்பான துறவிகளுக்கு வழங்கப்பட்டன, அங்கு நாட்டின் பாதுகாப்பிற்கான இராணுவத்தின் நீண்ட ஆயுள் வேண்டி ‘செத் பிரித் பாராயண நிகழ்வு மற்றும் மத ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

பின்னர் கண்டி பல்லேகலையிலுள்ள 11 வது படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டு நிகழ்வுகள், சியம் பீட மகா விகாரையின் அதி வண. பேராசிரியர் பமுனுவே தம்மகீர்த்தி தேரரின் தலைமையில் மகா சங்க உறுப்பினர்கள் நடத்தப்பட்டது. அனைத்து இலங்கையர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய மூன்று தசாப்தகல யுத்தம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான இராணுத்தின் சேவைகளை பாராட்டிய மகா சங்கத்தினர் ஆசிகளையும் வழங்கினர்.

புனித வளாகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 'கிலன்பச' பூஜை பிரசாதங்களுக்கு மத்தியில் புனித உள் அறைக்கு மரியாதை செலுத்தினார். அந்த பாரம்பரிய சடங்குகள் மற்றும் அன்றைய ‘தேவ சடங்குகள் முடிந்தவுடன், இராணுவத்தில் உள்ள அனைவரினதும் சார்பாக தளபதியவர்களால் , தியவடன நிலமே அலுவலகத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்காக ஒரு தொகை நன்கொடை அளிக்கப்பட்டது. அதனை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் அதனை ஏற்றுக் கொண்ட பின்னர் தியவடன நிலமே திரு பிரதீப் நிலங்க தேல அவர்களால் ஆண்டு பூர்த்தியை நிகழ்விற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது ஆண்டுவிழா ஏற்பாடுகளில் வழக்கமான அம்சமாகும்.

இவ்வருடத்திற்கான நிகழ்வுகள் குறைந்த அளவிலானவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்த நிலையில் முதலில் ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான நுழைவாயில் வளாகத்திற்கு இராணுவ தளபதியின் வருகை இடம்பெற்ற போது பகுதியிலிருந்து அனைத்து இராணுவ கொடிகளும் சிப்பாய்களில் கைகளில் ஏந்திச் செல்லப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சேனா வடுகே, சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தாய்நாட்டைப் பாதுகாக்கும் நாட்டின் பிரதான அமைப்பான இராணுவமானது தற்பொழுது பலதரப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வல்லமைமிக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு 17 ஆம் திகதிய இராணுவச் சட்டத்தின் மூலம் ஏர்ல் கைத்னஸின், பிரிகேடியர் ரோட்ரிக் சின்க்ளேரின் தலைமையில் அதனுடைய முதலாவது நிரந்தர படையினை ஆரம்பித்ததன் ஊடாக 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் சிலோன் இராணுவம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 71 ஆண்டுகளில் அதன் வாழ்நாளில் ஒரு முழு அளவிலான இராணுவமாக மலர்ந்துள்ளது, இன்றுவரை இலங்கை இராணுவம் 23 இராணுவத் தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டு, குறித்த அமைப்பை திறப்பட செயற்படுத்தப்பட்டுள்ளது. கலாட் படை, உதவி படைகளின் உடனான 25 படையணிகளின் விரிவாக்கத்தினூடாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தினதும் இதயங்களையும் மனதையும் வென்றுள்ளது.