Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2021 17:30:35 Hours

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் 27 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மர நடுகை

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி தலைமையத்தின் 27 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் சமூக பணிகளின் ஓர் அம்சமாக தலைமையக வளாகத்தில் 100 மாங்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வுடன், கொழும்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரியா குளக்கட்டு பகுதியை தூய்மையாக்கும் பணிகளிலும் செவ்வாய்க்கிழமை (14) படையினரால் முன்னெடுக்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவான “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாரத்துடன் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் டீஎம் அபேரத்ன அவர்களின் வழிகாட்டலுடன் வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

100 மாங்கன்றுகளை நாட்டிவைப்பதற்கான மேற்படி நிகழ்வில் அதிகாரிகளுடன்,சிப்பாய்களும் கலந்துகொண்டனர். ஆண்டு விழாவை முன்னிட்டு மத நிகழ்வுகளும் இடம்பெற்றன.