Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2021 10:00:35 Hours

23 வது இலங்கை சிங்கப் படையினர் ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கல்

பிரிகேடியர் சந்திக பீரிஸ் அவர்களினால் கட்டளையிடப்படும் 242 வது பிரிகேடின் 23 வது இலங்கை சிங்கப் படையினரிடம் தனிநபர் ஒருவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட உலர் உணவு பொதிகள் புதன்கிழமை (22) 23 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.பி.ஜி.ஜி.எஸ் விஜயதிலகவின் மேற்பார்வையின் கீழ் கொவிட் 19 தொற்று காரணமாக பொருளாதார கஸ்டங்களை எதிர் கொண்டுள்ள பனாமா மற்றும் பொத்துவில் பகுதிகளில் உள்ள 50 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அருகம்பேய் பெவிஸ்டா உணவகத்தின் தலைவி திருமதி கெமுணு பெரேராவின் நிதியுதவியுடன் தலா 2550/= மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் பனாமா மற்றும் பொத்துவில் கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

படையலகின் 2 ம் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.ஜி.டி வீரகொட, மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒவ்வொரு வீடு களுக்கும் சென்று விநியோகம் செய்தனர்.