Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2021 15:30:35 Hours

உள சுகம் தொடர்பில் 11 வது படைப்பிரிவினர் தெளிவுப்படுத்தல்

உள சுகம் மற்றும் உளவியலில் நன்மை தொடர்பில் 11 வது படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினரை தெளிவூட்டும் செயலமர்வு 2021 செப்டம்பர் மாதம் 15 ம் திகதி இடம்பெற்றது.

குறித்த படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினரை தெளிவூட்டமு வகையிலான செயலமர்வினை பல்லேகலை 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரால் கித்சிரி அவர்கள் 'லினியா க்ளோத்திங் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். வளவாளர்களாக மனநல வைத்தியர் சமிந்த வீரசிரிவர்தன மற்றும் உளவியல் விரிவுரையாளரான திருமதி சுவர்ணா ஏக்கநாயக்க கலந்துக் கொண்டனர்.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, படையினரின் மன அழுத்தத்தைப் போக்கவும் மற்றும் உயர் மட்ட மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த செயலமர்வின் வளவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.