17th September 2021 08:30:35 Hours
நாட்டில் இருந்து கொவிட் -19 வைரஸை ஒழித்து அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசீயை வழங்கும் நோக்கில் மகா சங்கத்தினரின் பங்குபற்றலுடன் சமீபத்தில் 3 வது இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி படையினர் ஹிங்குரகொட ஜயமகா மகா விகாரையில் இரவு முழுவதும் பிரீத் பாராயணம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன அவர்களின் ஒத்துழைப்பில் 3 வது இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் இந்த ஆசீர்வாத விழாவிற்கான பிரீத் மண்டபம் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இரவு முழுவதுமான பிரீத் பாராயணத்தின் பின்னர் மறுநாள் மகா சங்கத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டது.