Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2021 08:00:35 Hours

கிழக்கு பாதுகாப்பு படைகளின் தளபதி 241 , 242 வது பிரிகேட்களுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கடந்த வியாழக்கிழமை (16) நில அளவீட்டு பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு முகுது மகா விகாரையின் தலைமை தேரர் வண வரக்காபொல இந்ரசிறி தேரர், அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல் பண்டாரநாயக்க, 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லாமஹேவா, 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொத்துவில் பிரதேச செயலக செயலாளர், கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் பாதுகாப்பு ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் , கிழக்கு மாகாண தொல்பொருள் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் விஜயம் செய்து பிரச்சினைகள் தொடர்பில் விவாதித்தார்.

இதன்பின் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கோமாரி 242 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரி மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் இடைநிலை பயிற்சிகள், தவறான நடைமுறைகள் சம்மந்தமாகவும் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்துறை, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நடத்தை பாதுகாப்புப் பணிகளுக்கான தேவை குறித்தும் தெளிவுப்படுத்தினார்.

மேலும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வெள்ளிக்கிழமை (17) தீகவாபி தூபி சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிடச் சென்று, சீரமைப்புப் பணிகளை விரைவில் செய்து முடிக்குமாறு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அம்பாறையில் உள்ள மாணிக்கமடு விகாரைக்கு சென்று வழிபாடு செய்துக் கொண்டு விகாரையின் தலைமைக் தேரர் வண. அம்பகஹபிட்டிய சீலரதன தேரரிடம் ஆசி பெற்றார். பின்னர் அக்கரைப்பற்று 241 வது பிரிகேட் தலைமையக விஜயத்தின் போது கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவை 241 வது பிரிகேட் தளபதி கேணல் சந்திர அபேகோன் வரவேற்றார். அங்கு படையினருக்கு உரையாற்றினார்.

இரண்டு நாள் விஜயத்தின் போது கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நிர்வாகம், செயல்பாட்டு, நல்வாழ்வு மற்றும் சிப்பாய்களின் தேவைகள் குறித்தும் அனைத்து பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.