17th September 2021 12:26:35 Hours
முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச (எஃப்எம்ஏ) புதிய தளபதியாக இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் (SLCMP) பிரிகேடியர் அனில் இளங்ககோன் புதன்கிழமை (15) பொறுப்பேற்றார்.
அவர் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் 16 வது (எஃப்எம்ஏ) தளபதி ஆவார். அவருக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச (எஃப்எம்ஏ) தலைமையக வளாகத்தில் 6 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் சிப்பாய்களினால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. வழக்கமான இராணுவ சம்பிரதாயங்கள் தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக குறைந்த அளவில் நடத்தப்பட்டன என்பது குறுப்பித்தககது.
அதைத் தொடர்ந்து பிரிகேடியர் அனில் இளங்கக்கோன் தனது புதிய அலுவலகத்தில் சர்வ மத அனுஷ்டனங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், அன்றைய நிகழ்வை முன்னிட்டு வளாகத்தில் மாங்கன்று நட்டி வைத்ததுடன் பின்னர் தனது கட்டளையின் கீழுள்ள கட்டளை அதிகாரிகளுக்கு உரையாற்றுகையில் முல்லைத்தீவுப் பகுதியில் சுமுகமான விவகாரங்களுக்கான தனது எதிர்கால நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் அனில் இளங்ககோன் இராணுவ தலைமையகத்தில் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளராக பணியாற்றினார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட இராணுவத்தில் ஒய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்ப்பட்டுள்ளார். தனது புதிய பதவிக்கு மேலதிகமாக பிரிகேடியர் அனில் இளங்ககோன் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் (SLCMP) படைத் தளபதியாக செயல்படுகிறார்.
முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் பணி நிலை அதிகாரிகள் , மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.