Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2021 14:00:36 Hours

இராணுவ விடுதி மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தின் விடுதி மற்றும் பராமரிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக கஜபா படையணியின் பிரிகேடியர் சாலிய அமுனுகம திங்கள்கிழமை (13) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போதான மத வழிபாடுகளை தொடர்ந்து பிரிகேடியர் சாலிய அமுனுகம பல அதிகாரிகள் முன்னிலையில் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக அவர் கலாஓயா சாலியவெவையிலுள்ள இராணுவ தொழிற்பயிற்சி மையத்தின் தளபதியாக பணியாற்றினார். பணிப்பகத்தின் சில பதவி நிலை அதிகாரிகள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.