Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2021 08:00:36 Hours

இராணுவ நிருவாக கல்லூரியின் வழங்கல் பாடநெறி எண் - 3 நிறைவடைந்தது

இராணுவத்தின் பலதரப்பட்ட படையணிகளையும் பிரதிநிதுவப்படுத்தும் 42 அதிகாரா ஆணையற்ற அதிகாரிகளுக்கான வழங்கல் பாடநெறி எண் - 3 சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றதுடன் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இராணுவ நிருவாக கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி 42 அதிகார ஆணையற்ற அதிகாரிகளும் இலங்கை இராணுவத்தின் உபகரண மாஸ்டர் அதிகாரிகளாக நியமனம் பெறுவதற்கு முன்பாக இராணுவ வழங்கல் நிர்வாகம் தொடர்பாக பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படையின் அதிகார ஆணையற்ற அதிகாரி 1 எச்எம்கே விஜேசிங்க முதலிடத்தை பிடித்துக்கொண்டார். நிறைவு விழாவின் போது மேற்படி அதிகாரிக்கான பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற இராணுவ நிருவாக கல்லூரியின் தளபதி நிகழ்த்திய இறுதி உரையின் போது தொழில் வல்லுனர்களாவதற்கு அதிகாரங்களை பெற்றுகொண்ட பின்னர் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய குணவியல்புகள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். மேலும் அதிகார ஆணையற்ற அதிகாரிகள் நிர்வாக துறையில் கற்கை நெறியினை தொடர வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேற்படி சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள் தியதலாவையிலுள்ள தொண்டர் படை பயிற்சி கல்லூரிக்கு இணைக்கப்பட்ட பின்னர் இறுதி கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துகொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.