Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2021 16:00:09 Hours

பொறியியல் படையின் சிப்பாய்களால் ஜனாதிபதியின் பணிப்புக்கமைய பொத்தனிகந்த மகா வித்தியாலயத்தில் மறுசீரமைப்பு பணிகள்

திக்கெல்லகந்த கிராமத்தில் 06 பிப்ரவரி 2021 அன்று நடத்தப்பட்ட 9 வது 'கம சமக பிலிசந்தரக்' நிகழ்வின் போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புக்கமைய யடியந்தோட்டை, மாலிம்பொட மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் சி.டபிள்யூ டபிள்யு கன்னங்கரா கேட்போர் கூடத்தை மறுசீரமைப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய ஆரம்பிக்கப்பட்டன.

இத்திட்டம் 1 வது கள பொறியியல் படையணியின் சிப்பாய்களால் நான்கு மாதங்களுக்குள் விளையாட்டு மைதானம் சீரமைப்பு மற்றும் கேட்போர்கூடத்தின் சீரமைப்பு பணிகள் என்பன நான்கு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன. 12 (தொ) பொறியாளர் சேவைப் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் பாடசாலை கேட்போர்கூடத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட 4.2 மில்லியக் ரூபாய் ஜனாதிபதி செயலகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பெறுகை நடவடிக்கைகள் கேகாலை மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதோடு தலைமை கள பொறியியலாரினால் உரிய காலப்பகுதிக்குள் நிர்மாண பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.