Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2021 13:00:09 Hours

24 வது படைப்பிரிவினரால் நிந்தவூரில் நிவாரண மற்றும் மூலிகை மருந்து பொருட்கள் பகிர்ந்தளிப்பு

அம்பாறை பெரிய நீலாவணை 1B கிராமசேவகர் பிரிவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள 20 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நிலையை கருத்திற் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழுள்ள 241 வது பிரிகேடின் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்களால் வெள்ளிக்கிழமை (10) உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா மற்றும் 241 வது பிரிகேட் தளபதி ஆகியொரின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதேமடு, பெரிணநீலாவணை 1B பிரிவின் கிராம சேவகர் 3 வது(தொ) விஜயபாகு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மேற்படி நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அதே தினத்தில் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் தொற்றா நோய் தொடர்பான ஆயுர்வேத ஆராய்ச்சி மைய பணிப்பாளர் டொக்டர் நக்பர் இணைந்து நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு 'சுவாதரணி' மூலிகை மருந்து பக்கெட்டுகளை பகிர்ந்தளித்தனர். அத்தோடு தீகவாபிய பகுதியில் கொவிட்-19 தொற்றாளிகள் மற்றும் கொவிட் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கான மருந்து பொதிகள் தீகவாபிய பிரிவெனா பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. பொத்தவல ஸ்ரீ சந்திரானந்த தேரரிடம் கையளிக்கப்பட்டது.