Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2021 20:07:25 Hours

போலி கூட்டு பயிற்சிகளின் போது கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்து மீட்பு நடவடிக்கை

இராணுவத்தின் தற்போதைய 'நீர்காகம் கூட்டுப் பயிற்சி XI -2021' இன் போலி கூட்டுப் பயிற்சிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொண்டனர். இதன்போது கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்த கிழக்கு ஆசிய விடுதலை போராளிகளிடம் சிக்கிக்கொண்ட கொங்கோடியா மீன்பிடி மற்றும் துறைமைுக அமைச்சரை (அனுமான அடிப்படையில்) மீட்பதற்கான நடடிக்கைகளை படையினர் மேற்கொண்டனர்.

மேற்படி போலி பயிற்சி நடவடிக்கைகளை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா “சூம்” தொழில்நுட்ப்பத்தினூடாக பார்வையிட்டார். இராணுவ தலைமையகத்தில் உள்ள மேடையில் 4 வது கொமாண்டோ படையணியின் சிப்பாய்களால் எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து வியக்கத்தக்க வகையில் மூலோபாய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மேற்படி நடவடிக்கைகள் விஷேட நடவடிக்கைகளுக்கான தளபதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டத்து. அதன்படி 4வது கொமாண்டோ படையணி 4 வது கொமாண்டோக்களின் கடத்தல் தடுப்பு மற்றும் பணயக்கைதி மீட்பு பிரிவுடன் சரியான இடத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன்போது எதிர்பார்த்தபடி கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இடம்பெற்ற கடுமையான மோதலுக்குப் பின்னர், மீன்வளத்துறை மற்றும் துறைமுக அமைச்சரை மீட்கும் பணியை படையினர் செய்து முடித்தனர்.

மேற்படி நடவடிக்கையானது 4 வது கொமாண்டோ படையணியின் நடவடிக்கைகளுக்கான தளபதி லெப்டினன் கேணல் பி கேக்குலாவலவின் மேற்பார்வையில் கீழ் இடம்பெற்றதுடன், ஆரம் கட்டமாக வடக்கு நுழைவு பகுதிக்கும் இரகசியமாக படையினர் நுழைந்த பின்னர் ஏனைய நுழைவாயில்கள் மற்றும் வான்வழி பகுதிகளுக்குள் நுழைந்த படையினர் எதிர்களின் பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர். மேற்படி போலி இராணுவ பயிற்சி சூம் தொழில்நுட்பம் மூலம், இந்தியா, மாலைத்தீவு மற்றும் ஓமான் இராணுவத்துடன் இணைந்து சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வெளிநாட்டுப் படையினரால் கண்காணிக்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, கள பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளரும் நெருக்கடி தவிர்ப்பு பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, இராணுவ தலைமையக நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 14 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, கள பயிற்சி பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, போலி கூட்டு பயிற்சிகளின் தலைமை ஆலோசகர் பிரிகேடியர் சங்க ஜெயமஹா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பயிற்சிகளை பார்வையிட்டனர்.

முப்படையினருக்கான பதினோராவது கூட்டு பயிற்சியான 'நீர்காகம் கூட்டுப்பயிற்சி XI - 2021', வெளிநாட்டு இராணுவப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 2021 செப்டம்பர் 3 ஆம் திகதி மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு உடற்பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளரும், இராணுவ நெருக்கடி தவிர்ப்பு பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, 65 வது படைப்பரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி ஆகியோரின் விளக்க உரைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. .

இந்த வருடத்தின் 11 வது அத்தியாயமான , பல்வேறு நாடுகளின் பங்கேற்புடனும் மற்றைய ஆயுத படைகள் மற்றும் சகோதர சேவைகளின் ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்டிருந்த்தது. அதற்கமைய படைகளை கூட்டிணைத்து சிறப்பு நடவடிக்கை படையொன்றும் நிறுவப்பட்டது. இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வீரர்களின் பயிற்சிகளை பார்வையிட்டனர். இப்பயிற்சிகளின் போது குறிபிட்டதொரு காலப் பகுதிக்குள் வெற்றி இலக்கை அடையும் நோக்கிற்காக கூட்டு பயிற்சிகளுடன் இணைந்து பணியாற்றல் மற்றும் தலைமைய அலுவலகம், படையணியின் செயற்பாடுகளுடன் இணைந்து கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி போலி களப் பயிற்சியானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டமைக்கப்பட்டது. விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த கள பயிற்சிகள் மன்னார், வில்பத்து, அரிப்பு, துணுக்காய், வவுணிகுளம், நெடுங்கேணி, சுண்டிக்குளம், நாயாறு, திரைய்யா, நிலவேலி, தோப்பூர், இலங்கந்தை, வாகரை, தோணித்தத்துமாடு, நரகாமுல்ல, கஞ்சிகுடிக்குறையாறு ஆகிய இடங்களில் 25 செப்டம்பர் 2021 அன்று வரை இடம்பெறவுள்ளதுடன் அதன் இறுதி நிகழ்வு 2021 செப்டம்பர் 26 ஆம் திகதி இடம்பெறும்.

மேற்படி பயிற்சிகள் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, படைக்கல பிரிகேட், இயந்திரவியல் காலாட் பிரிகேட், எயார் மொபைல் பிரிகேட், 583 வது காராட் பிரிகேட் மற்றும் இலங்கை விமானப் படையணியின் சிறப்புப் படைகள் போன்றவை இந்த வரலாற்றில் முதல் முறையாக குறிப்பிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

குறித்த களப் பயிற்சிகளில் வெளிநாட்டு இராணுவ கண்காணிப்பு மற்றும் பங்பற்றாளர் உட்பட 2846 சிப்பாய்கள் கலந்துகொண்டதுடன் இந்த கூட்டுப்பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மின்னேரியா காலாட் பயிற்சி நிலையத்தில் “சூம்” தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான திட்டமிடல்கள் பொதுப்பணி பணிப்பாளர், பயிற்சி பணிப்பாளர், நடவடிக்கை பணிப்பாளர், சிறப்பு படையினர், கொமாண்டோ படையினர், கடற்படை மற்றும் விமானப் படையின் பங்கேற்புடன் வடிவமைக்கப்பட்டிருந்து.

மேற்படி கூட்டு பயிற்சிகள் கற்பனை ரீதியாக கட்டமைக்கப்பட்டவை என்பதுடன் ஜனநாயக கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நாடொன்றிற்குள் பிராந்திய ஒருமைப்பாட்டை தக்க வைப்பதன் சவால்கள்கள் தொடர்பில் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. பல்வேறு நடைமுறைகளுக்கமைய இனங்களுக்கிடையேயான கருத்தியல் நம்பிக்கையின்மை காரணமாக தோற்றம் பெற்ற வரலாற்று கிளர்ச்சிகளின் வளர்ச்சியானது அரசாங்க அதிகாரங்களை குறை மதிப்பீட்டிற்குட்படுத்திய பயங்கரவாத செயற்பாடுகளை மட்டுப்படுத்த மேற்படி இராணுவ கூட்டு பயிற்சி நிலைமைகளின் அவசியம் உருவாகியது.

பல ஆண்டுகளாக, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பயிற்சிகளில் ஒன்றான கூட்டு பயிற்சிகள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு பன்னாட்டு சூழலில் விலைமதிப்பற்ற இராணுவ அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ள உதவும்.

ஒரு திறமையான சிறப்பு நடவடிக்கை படை வீரரை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே மேற்படி பயிற்சிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மூலோபாய ரீதியாக தீர்மானங்களை எடுக்கும் திறன் கொண்ட மற்றும் சிறப்பு நடவடிக்கை படையின் தேவைக்கான இணைக்கபட கூடியவருமான படைவீரர் ஒருவரை உருவாக்குவதே பயிற்சிகளின் எதிர்பார்ப்பாகும். மேலும் போர் செயற்பாடுகளில் களமிறங்க தயார் நிலையில் இருப்பதற்கான சிறப்பு நடவடிக்கை படைவீரர்களை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.