Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2021 12:20:53 Hours

நீர் பயணிக்ககூடிய சுரங்க வடிவிலான பொலித்தீன் தவரனை திட்டம்

1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் அறுவடை மற்றும் உற்பத்தி தரத்தை மேம்படுத்தும் வகையிலும் பயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டதுமாக பொலித்தீனால் அமைக்கப்பட்ட சுரங்க வடிவிலான தவரனை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் தளபதி பிரிகேடியர் எச்ஏபீகே. ஹேவாவசம், சிறந்த பயிர் உற்பத்தியின் அவசியத்தை கருத்தில் கொண்டு மேற்படி திட்டத்தை முன்மொழிந்தார்.

1 வது இலங்கை பொதுச் சேவை படையணியின் பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்டி ரத்நாயக்க, தியதலாவ விவசாய அதிகாரி டபிள்யூஎம்டீபி பொன்சேகா, 1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சீ.எஸ்.தெமுனி ஆகியோரால் தியதலாவையிலுள்ள 1 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி முகாமில் இந்த திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.