Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2021 08:00:02 Hours

முல்லைத்தீவு தலைமையக படையிரால் காய்கறிகள் பொதுமக்களின் வீட்டு வாசல்களுக்கே விநியோகம்

591வது பிரிகேட்டின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையணியினர் முல்லைத்தீவு பொருளாதார கூட்டுரவு சங்கம், முல்லைத்தீவு, கிராம உத்தியோகத்தர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வியாழக்கிழமை (9) மற்றும் வெள்ளிக்கிழமை (10) ஆம் திகதிகளில் பொது மக்களின் வீட்டு வாசல்களுக்கு சென்று மரக்க்கறிகளை நியாயமான விலையில் விநியோகித்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டள்ள வேளையில் மக்கள் நடமாட்டங்களும் தவிர்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து படையினர் வீடுகளுக்குச் சென்று மரக்கறி வகைகளை விநியோகிக்கும் நடமாடும் விற்பனைத் திட்டத்தினை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய மற்றும் 68 வது பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார ஆகியோரால் இத்திட்டம் மேற்பார்வை செய்யப்பட்டது.