Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2021 10:55:33 Hours

கிராம சேகவகரின் கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைகளுக்கு படையினர் உதவி

மட்டக்குளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவகர் (பெண் அரசாங்க அதிகாரி) ஒருவரின் கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழஙகியுள்ளனர். பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி மேற்படி சம்பவத்துடன் இராணுவ வீரர்கள் எவருக்கேனும் தொடர்புள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் மேற்படி விசாரணைகள் ஞாயிற்றுக்கிழமை (12) ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்குளி இராணுவ முகாமில் பணிகளில் ஈடுப்படுத்தபட்டிருந்த கோப்ரல் நிலை சிப்பாய் ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் தொடர்பை பேணியுள்ளமையும் குறித்த சந்தேக நபரான சிப்பாய் ஏனைய சில நபர்களின் ஒத்துழைப்புடன் இந்த கொலையுடன் மறைமுக தொடர்புபட்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்வத்துடன் இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக தட்டணை சட்டத்திற்கமைய கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினரை இராணுவ தளபதி அறிவுறுத்தியுள்ளார். (முடிவு)