Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2021 23:16:09 Hours

மருத்துவ பீடத்தினால் மேலும் 200 ஒக்ஸிமீட்டர்கள் கொவிட் - 19 தடுப்புச் செயலணியின் தலைவருக்கு அன்பளிப்பு

இலங்கை மருத்துவச் சங்கம் மற்றும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் என்பன ஒன்றிணைந்து ஹெல்ப்லைன் 1904 மற்றும் டொக் கோல் 247 ஆகிய அவசர மருத்துவ உதவிக்கான தொலைபேசி அழைப்பு மையங்களின் பொது மக்களுக்கான வைத்திய ஆலோசனை சேவைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் செயற்பாடுகள் என்பவற்றை ஊக்குவிக்கும் விதமாகவும் மருத்துவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் வறிய மக்களுக்கு உதவுதற்காக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பிடாதிபதி பேராசிரியர் வஜிர திசாநாயக்க அவர்களினால் வெள்ளிக்கிழமை (10) 200 ஒக்ஸிமீட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி ஒக்சிமீட்டர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்றுநோயை குணப்படுத்தும் செயற்பாடுகளில் ஒக்ஸிமீட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக மேற்படி உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதால் சுவாச நோய்க் காரணமாக சம்பவிக்கும் மரணங்கள் அதிகரிக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீடுகளுக்குள் வைத்து பராமரிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக 250 ஒக்ஸிமீட்டர்கள் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு இலங்கை மருத்துவச் சங்கத்தின் ஆலோசனையின் பிரகாரம் ஆரம்பகால பரிசோதனைகள், சிகிச்சை மற்றும முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிப்பதற்காக 1904 ஹெல்லைன் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான சிகிச்சை மையங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கு வீட்டில் இருக்கும் போது நோயாளிகளை பராமரிப்பதற்கு அவசியமான மருந்து வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி அன்பளிப்பை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் பல்கலைக்கழக மருத்துவ பீட உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். இதனால் வீடுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் இரத்த செறிவு அளவை கண்காணிக்க உதவும்.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்ன அவர்களுடன் பேராசிரியர் பிரசாத் கட்டுலந்த மற்றும் பேராசிரியர் அஜித் மலாலசேகர உள்ளிட்டோர் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.