Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2021 15:30:18 Hours

4 வது கெமுனு ஹேவா படையினரால் தேவையுள்ள குடும்பங்களுக்கு குடிநீர் திட்டம்

மட்டக்களப்பு ராஜதுரைநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடுகளை எதிர்நோக்கியிருந்த 125 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் 4 வது கெமுனு ஹேவா படையினரால் நிறுவப்பட்ட குடிநீர்த்திட்டம் வெள்ளிக்கிழமை (03) அப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வின் போது குடிநீர் திட்டத்தின் நிறுவுனர்களுக்கு பொது மக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டு அடையாள அம்சமாக குடிமகன் ஒருவரால் தண்ணீர் பானை ஒன்றில் நீர் நிரப்பட்டது. இத்திட்டத்திற்கான நீர் தாங்கி முழுமையாக நிரம்பிய பின்னர் அதிலிருந்து பல நாட்களுக்கு நீர்த் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என்பதால் திட்டம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது.

231 வது பிரிகேட் தளபதி கேணல் துலீப பண்டார, சிவில் விவகார ஒருங்கிணைப்பாளர் மேஜர் கேடிஎம் தர்மவர்த, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஜேஏஎம்பி குனரத்ன மற்றும் குடிநீர் திட்டத்தின் பயனாளிகளும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.