Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2021 17:00:18 Hours

2 வது (தொ) இலங்கை இலேசாயுத படையினர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை பயிற்சி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது பிரிகேட்டின் கீழுள்ள 144 வது பிரிகேடின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை சிப்பாய்களால் களனி ஆற்றங்கரை ஓரத்தில் வௌ்ளப் பெருக்கு ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது தொடர்பாக ஒத்திகை பயிற்சிகளில் செவ்வாயக்கிழமை (7) ஈடுப்பட்டனர்.

இந்த பயிற்சி செயற்பாடுகளின் போது படையினருக்கு நுட்பமான அணுகுமுறைகள், நடைமுறை தொடர்பாடல் முறை, மீட்பு செயற்பாடுகள், பாதுகாப்பாக பகுதிகளை நோக்கி வெளியேற்றுதல், உணவு மற்றும் மருந்து விநியோகம் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்ன, ஆகி யொரின் அறிவுறுத்தல்களின் கீழ். 144 வது பிரிகேட் தளபதி கேணல் விதான கொடிதுவக்கு அவர்கள் 2வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டயிள்யூஎம்எஸ் குமார அவர்களுடன் இணைந்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மேற்படி செயற்பாடுகளில் பங்கெடுத்தனர்.