Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2021 17:00:10 Hours

யாழ்ப்பாணத்தில் 'தியாஹி' தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் படையினரால் 1000 நிவாரணப் பொதிகள் விநியோகம்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மலையகம் ஆகிய இடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சமூக தொண்டுகளை முன்னெடுத்து வரும் 'தியாஹி' தொண்டு நிறுவனத்தின் திரு.வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் அனுசரணையின் கீழ் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 52 மற்றும் 55 வது படைப்பிரிவு சிப்பாய்களால் கோப்பாய், வரதவிளான், அராளி, மீனாச்சி, காரைநகர், தெளிப்பளை, பலாலி, இலக்காடு, உறிக்காடு, விடத்தப்பளை, கொடிகாமம், கோவில் கண்டி அல்லரை, எல்லங்குளம், கட்கோவளம் மற்றும் மருதந்தேர்னி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (04) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவாக்கு அவர்களின் வழிகாட்டலுக்கமைய 1000 உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

யாழ். தளபதி மற்றும் படைப்பிரிவு தளபதிகளின் அறிவுறுத்தலின் படி உரிய கிராம சேவகர்களுடன் கலந்துரையாடி, தேவையுள்ள பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன்படி 1000 நிவாரணப் பொதிகள் படையினரால் பயனாளிகளின் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கப்பட்டன. யாழ். தீபகற்பத்தில் காணப்படும் கொவிட் - 19 அச்சுறுத்தல் நிலைமை காரமாண குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்நோக்கும் நெறிக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல, 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, 52 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் கிராம சேவகர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நிகழ்வில் பங்கெடுத்தனர்.