Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2021 12:00:10 Hours

பரந்தனில் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட 213 புதிய சிப்பாய்களின் பிரியாவிடை நிகழ்வு வெளியேற்ற நிகழ்வு

பரந்தனில் உள்ள 57 வது படைப்பிரிவின் 9 வது இலங்கை சிங்கப் படையணி முகாமில் முகாமில் 57 வது படைப்பிரிவு மற்றும் 571 வது பிரிகேட்டின் வழிகாட்டுதலின் கீழ் நான்கு மாத கால இல - 01 பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொண்ட 213 சிப்பாய்களின் பிரியாவிடை நிகழ்வு உரிய சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி புதன்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி புதிதாக இணைந்துகொண்ட சிப்பாய்கள் கொமாண்டோ படையணி, விஷேட படையணி,இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவ படையணி மற்றும் இயந்தி மற்றும் மின்சார பொறிமுறை படையணி ஆகிய படையணிகளில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

9 வது இலங்கை சிங்க படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்ஜீ எப்பா, இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்று நிறைவுரையை நிகழ்த்தினார். அவர் இராணுவ வீரர்கள் பொறுப்புகளையும், ஒழுக்கத்தின் உயர் தரங்களை பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அத்தோடு ஆயுதப்படைகள் ஒரு தேசத்தின் வலுவான தூண்கள் மற்றும் மனிதர்களின் பாதுகாவலர்களாவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதை இலங்கை இராணுவ இயந்திவியல் மற்றும் மின்சார பொறிமுறைப் படையின் சிப்பாய் ஜேபீஎன்சீ சமரசூரிய பெற்றார். இயந்திவியல் மற்றும் மின்சார பொறிமுறைப் படையின் யூ.எஸ் குமார சிறந்த உடற்தகுதிக்கான விருது மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையின் எச்பீகேஜீஎஸ் உமயங்க சிறந்த பயிற்சியாளருக்கான விருதையும் பெற்றனர். நிகழ்வின் பிரத விருந்தினரிடத்திலிருந்து விருதுகளை அவர்கள் பெற்றுக்கொண்டதோடு, அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழுவினர் பணியாளர்கள் ஆகியோர் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிலவும் சுகாதார அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த நிகழ்விற்கு ஆட்சேர்பு செய்துக்கொள்ளப்பட்ட வீரர்களின் உறவினர்கள் அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.