07th September 2021 16:00:10 Hours
5 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எல் ரத்நாயக்க மற்றும் ஆலைப் பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இராணுவத்தின் 5வது களப் பொறியாளர் படையணியினர் தெஹிகஸ்முல்ல தொடக்கம் ஹெலம்ப வரையான (1.4 கிமீ) மற்றும் கொஸ்கஷந்திய தொடக்கம் நெலுமுயன வரையான பகுதிகளில் வீதி சீரமைப்புப் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் 100,000 கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் இலங்கை இராணுவ பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தோடு இப்பணிகளுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் , இராணுவ தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியல் பிரிவின் தளபதி ஜெனரல் சந்தன விஜேசுந்தர ஆகியோரின் உரிய ஆலோசணை மற்றும் வழிகாட்டலின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.