Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2021 17:15:44 Hours

மேலும் ஒரு தொகை கடத்தல் மஞ்சள் மீட்பு

7 வது விஜயபாகு காலாட்படையணியினர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 54 படைப்பிரிவின் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புதன்கிழமை (8) மன்னார் பாலத்தின் அருகில் வீதித்தடையிட்டு நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 306 கிலோ கடத்தல் மஞ்சளை மீட்டுள்ளனர்.

மேற்படி கடத்தல் மஞ்சளை கடத்திச் சென்ற சந்தேகநபர் மன்னாரில் இருந்து ஏறாவூருக்கு வாகனமொன்றில் கடத்திச் சென்ற வேளையில் சிக்கியுள்ளார். குறித்த கடத்தல் மஞ்சளின் பெறுமதி 1.836 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனமும் மஞ்சள் தொகையும் மேலதிகள விசாரணைக்களுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.