Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2021 13:30:49 Hours

542 வது பிரிகேட் படையினரால் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் நிவாரணப் பொதிகள் வீட்டு வாசல்களுக்கு விநியோகம்

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்வேஷினி அமைப்பால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 542 பிரிகேட் படையினரால் , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு சமூகநல திட்டமாக இஹல விஜயகம , கொண்டச்சி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 45 எகுடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

542 வது பிரிகேட் படையினரால் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் நிவாரணப் பொதிகள் வீட்டு வாசல்களுக்கு விநியோகம்திரு ரவி ராஜபக்ஷவின் அவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் இந்த நிதி உதவி கிடைக்கப்பெற்றிருந்தது. இந்நிகழ்வு 542 வது பிரிகேட் மற்றும் 8வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவுகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததோடு, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் அறிவுரைக்கமைய 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகரவின் மேற்பார்வையில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி மேற்படி பொதிகள் பயனாளிகளின் வீடுகளுக்கே விநியோகிக்கப்பட்டன.

542 வது பிரிகேட் படையினரால் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் நிவாரணப் பொதிகள் வீட்டு வாசல்களுக்கு விநியோகம்54 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ஜகத் பிரேமதாச, சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் அமித் மங்கள, 8 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் சரத் கீர்த்திரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் சிலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.