Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2021 11:00:49 Hours

231 வது பிரிகேடின் 11 வது சிங்கப்படையினரால் தேவையுள்ள மற்றுமோர் குடும்பத்திற்கான வீடு நிர்மாணிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழுள்ள 231 வது பிரிகேடின் 11 வது இலங்கை சிங்கப்படையணியின் படையினரால் மட்டக்களப்பு பக்கி எல்ல பகுதியில் வசிக்கும் வறிய குடும்பமொன்றுக்கு அவசியமான வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் புதன்கிழமை (01) நாட்டிவைக்கப்பட்டது.

மேற்படி வீட்டின் நிர்மாண பணிகளுக்கான நிதி உதவி சிரேஷ்ட உளவியலாளரும் போதகருமான திரு சந்தன குணவர்தன அவர்களால் வழங்கப்படவுள்ளதுடன், இத்திட்டத்தை செயற்படுத்த 11 வது சிங்கப்படையணி படையினரால் மனித வள உதவியும் பொறியியல் சேவைப் படையணியின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் வழங்கப்படவுள்ளது.

231 வது பிரிகேட் தளபதி கேணல் துலீப பண்டார, 11 வது இலங்கை இராணுவ சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட உளவியலாளர் திரு சந்தன குணவர்தன, மற்றும் சில அதிகாரிகளும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.