Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2021 13:00:49 Hours

மாத்தளையில் நோயாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் ஆரம்பம்

மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிக நீராவி வசதியினை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் 53 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களினால் பல்லேபொல பொது நூலக வளாகத்தில் சிகிச்சைகளுக்கான உதவிகளை வழங்கும் அறை மற்றும் அம்பூலான்ஸ் சேவை ஆகியன வியாழக்கிழமை (3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த உதவி சேவையின் துவக்கம் பெரும்பாலும் சுகாதார அதிகாரிகளுக்கு அவசர ஏற்பாடுகளை நெருக்கமாக ஒருங்கிணைக்க உதவும்.

53 வது படைப்பிரிவின் தளபதி , பல்லேபொல பிரதேச சபை தவிசாளர், 53 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.