Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2021 10:00:49 Hours

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு மத்திய படைகள் உதவி

கொவிட் - 19 தொற்று நோய் பரவலை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தின் மடவல மற்றும் வத்தேகம உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொலிஸாருடன் இணைந்து இராணுவ “ மோட்டார் சைக்கிள் ” குழு விஷேட கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை (3) முதல் மேற்படி கண்காணிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டவிதிமுறைகளை மீறிச் செயற்படும் நபர்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரினால் உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.