Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2021 13:20:30 Hours

மடு பகுதியின் பின்தங்கிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் பயிர்ந்தளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 653 வது பிரிகெட்டின் ஒருங்கிணைப்பில் பிரித்தானிய ஸ்வேஷினி' என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நன்கொடையில் தச்சநாமருதமடு மற்றும் மடு பகுதிகளில் வாழும் பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 உலர் உணவு பொதிகள் புதன்கிழமை (1) பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொவிட் தொற்றுநோய் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இப்பிரதேச மக்களின் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டு திரு ரவி ராஜபக்ஷ அவர்களால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தல் 653 வது பிரிகேட்டின் 24 கஜபா படையினரால் செயல்படுத்தப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் ஆசியுடன் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி உலர் உணவு பொதிகளை பயனாளிகளின் வீட்டு வாசலில் கொண்டு சென்று விநியோகித்த திட்டத்தில் பங்கேற்றார்.

653 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, 24 கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இந்திக சில்வா, 653 பிரிகேடின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.