Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2021 08:00:32 Hours

1 வது விஷேட ரைடர் படையினரால் முன்னெடுக்கப்பட்ட போலி கூட்டு பயிற்சியின் போது போதைப்பொருள் தலைவன் கைது

தற்பொழுது இடம்பெற்று வரும் நீர்க்காக கூட்டுப் பயிற்சி XI இன் ஓரு அங்கமாக புதன்கிழமை (08) 1 வது விஷேட படையினரால் அப்படையணியின் யுத்த ரைடர் குழுவின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கிடங்குகளை கண்டறிதல் மற்றும் கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் குழுக்களின் தலைவனை மடக்கிப் பிடிப்பதற்கான ஒத்திகை பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

புதன்கிழமை (08) அதிகாலை 5.55 மணியளவில் இலக்கு பகுதிக்குள் ரைடர் படைகள் கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் குழுவின் தலைவர் மறைந்திருந்த கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீடொன்றை சுற்றி வளைத்தனர். இதன்போது கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் உதவியாளர்கள் தங்கள் மறைவிடத்தை சுற்றி வளைக்கும் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதால் பலத்த வெடிப்புக்கள் நடந்தது. தீவிபத்தில் பல கிளர்ச்சியாளர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் அத்தோடு சிக்கிக்கொண்ட கிழக்கு ஆசிய விடுதலைப் போராளிகள் தலைவர் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் விரைவாக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

கூட்டுப்பயிற்சி பிரிகேட் தளபதி கேணல் சஞ்சீவ ஹோராவலவிதான அவர்களினால் இந்தியா, மாலத்தீவு மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் சர்வதேச போர் வீரர்களினின் கண்காணிப்பில் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த போலி பயிற்சிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.