Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2021 08:20:30 Hours

தெற்கில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் படி 20-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான தடுப்பூசியின் முதல் மாத்திரை தென் பகுதியில் வியாழக்கிழமை (2) தங்காலை, அம்பலாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு படையினருக்கு வழங்கிய தடுப்பூசி தொகையினை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழிகாட்டுதல்களின்படி. மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவின் மேற்பார்வையில் இராணுவ வைத்திய குழுக்களால் ஏற்றப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அந்த தடுப்பூசி மையங்களை நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தார்.

திட்டத்தின் வெற்றிக்காக இராணுவ வைத்திய குழுக்கள், 23 வது கஜபா படையணி, 3 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையணி மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பினையும் வழங்கினர்.

தெற்கில் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடரும்.