03rd September 2021 06:20:30 Hours
பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் அதிகரிப்பை நிர்வகிப்பதற்காக 61 வது படைபிரிவின் 613 வது பிரிகேட் படையினர் பரேக்க ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு விடுதியினை இடைநிலை பராமரிப்பு நிலையமாக (ஐசிசி) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இடைநிலை பராமரிப்பு நிலையம் தனது செயல்பாடுகளை செவ்வாய்க்கிழமை (31) தொடங்கியது.
613 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் மேற்பார்வையின் 3 (தொ) கெமுனு ஹேவா படையினர் இந்த மேம்பாட்டு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
கொவிட் தொற்றாளர்களின் சடுதியான அதிகரிப்பினை சமாளிக்கும் வகையில் இடை நிலை பராமரிப்பு நிலையங்களின் கட்டில் வசதிகளை அதிகரிக்குமாறு பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே தனது படைகளுக்கு இந்த நிலையத்தை ஓரிரு நாட்களுக்குள் மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.