Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2021 16:48:54 Hours

பொறியியலாளர்கள் சேவை படையணி அதிகாரிகளுக்கான புதிய அதிகாரிகள் கட்டிடடத் தொகுதி திறந்து வைப்பு

பனகொடவில் அமைந்துள்ள பொறியியலாளர்கள் சேவை படையணி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடுக்கு மாடி அதிகாரிகள் கட்டிட வளாகம் இன்று காலை (2) திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நவீன மாடிக்கட்டிடமானது ஒரு விசாலமான உணவக அறை , டிவி அறை, விருந்தினர்களின் வரவேற்பு பிரிவு, பொழுதுபோக்கு பிரிவு, சமையலறை மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளதுடன் பொறியியலாளர் சேவை படையணி அதிகாரிகளின் நீண்டகால தேவையையும் பூர்த்தி செய்கின்றன.

அங்கு வருகை தந்த பிரதம அதிதிக்கு நுழைவாயிலில் வைத்து பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை அடுத்து நிகழ்வு ஆரம்பமானது.

பொறியியலாளர்கள் சேவை படையணியின் படைத் தளபதியும் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரத்னசிறி கனேகொட, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மற்றும் இன்னும் சில மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து அங்கு வருகை தந்த ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஆகியோரை அன்புடன் வரவேற்றனர்.

பின்னர் வளாகத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு அன்றைய தலைமை விருந்தினர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனையடுத்து , தளபதியவர்கள் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த்தோடு பாரம்பரிய விளக்கெண்ணையினையினையும் ஏற்றி வைத்தார்.பின்னர் மகா சங்கத்தின் உறுப்பினர்களின் செத் பிரித் நிகழ்வு இடம்பெற்றதுடன் துறவிகளுக்கான 'அடபிரிகரா' வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பின்னர் தளபதியவர்கள் பொறியியலாளர்கள் சேவை படையணியின் படைத் தளபதியுடன் இணைந்து புதிய வளாகத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பின்னர் விருந்தினர் பதிவேட்டில் இராணுவத் தளபதி தனது எண்ணங்களை பதிவிட்டார். மேலும் வருகை தந்த தளபதிக்கு பொறியியலாளர்கள் சேவை படையணியின் படைத் தளபதியினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொறியியலாளர்கள் சேவைகளின் பணிப்பாளர் பிரிகெடியர் ஷாந்த குமார மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.