02nd September 2021 17:51:46 Hours
65 வது படைப்பிரிவு மற்றும் 651 வது பிரிகேட்டின் முழுமையான வழிக்காட்டல்கள் மற்றும் மேற்பார்வையின் முழங்காவல் பயிற்சி பாடசாலையில் பாடநெறி இலக்கம் ஒன்றின் கீழ் வெற்றிகரமாக நான்கு மாத பயிற்சியினை நிறைவு செய்த 287 சிப்பாய்கள் சனிக்கிழமை (28) சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைவான ஒரு எளிய விடுகை அணிவகுப்புடன் வெளியேறினர்.
குறித்த பயிற்சினை நிறைவு செய்தவர்கள் இயந்திரவியல் காலாட் படைக்கு 11 பேரும் கொமண்டோ படையணிக்கு 103 பேரும் சிறப்புப் படையணிக்கு 109 பேரும் இராணுவ புலனாய்வுப் படையணிக்கு 54 பேரும் இலங்கை தேசிய பாதுகாவல் படையணிக்கு 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்சி ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் சுமித் பிரியந்தவின் அழைப்பின் பேரில் 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் சிப்பாய்களின் பொறுப்புகளையும் உயர் தரங்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும் ஒரு செயன்திறன்மிக்க ஆயுதப்படையின் உறுப்பினராக தேசத்தின் வலுவான தூண்களாகவும் மக்கள் பாதுகாவலனாகவும் கடமை புரிதல் வேண்டும் என தெரிவித்தார்.
இராணுவப் புலனாய்வுப் படையணியின் பயிற்சி சிப்பாய் GTN குணசிறி சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கான விருதினைப் பெற்றார், சிறப்புப் படையணியின் HAP தேவ சிறந்த பயிற்சி சிப்பாய்க்கான விருதினையும் சிறப்புப் படையணியின் KGMP கொட்டுவேகெதர சிறந்த உடற் தகுதி சிப்பாய்க்கான விருதையும் பெற்றுக் கொண்டனர். பயிற்றுவிப்பு அதிகாரிகள் , பயிற்றுவிப்பாளர்கள்னர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விழாவில் பங்கேற்றனர்.