Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2021 06:50:00 Hours

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கல்

அதிமேதகு ஜனாதிபதியின் ஆசீர்வாதத்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின்அறிவுற்த்தலின் பேரில் இராணுவத்தின் நாடளாவிய கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த மற்றும் 231 வது பிரிகேட் தளபதி கேணல் திலுப பண்டார ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ தடுப்புசி வழங்கும் திட்டம் சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, ஆரியம்பதி பிராண்டிக்ஸ் அப்பேரல் சொல்யூஷன் லிமிடெட் ஊழயர்கள் 400 பேருக்கு 'சினோபார்ம்' தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை வழங்கப்பட்டது. 11 (தொ) இலங்கை சிங்க படையின் ஒத்தழைப்புடன் இலங்கை இராணுவ வைத்திய படையின் மருத்துவக் குழுவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முன்னுரிமைத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.