27th August 2021 12:45:45 Hours
சமூகத்தின் முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் வன்னி பாதுகாப்புப் படைத்தலமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் கண்காணிப்பில் வவுனியா மாவட்டத்தில் திங்கட்கிழமை (23) வன்னி பகுதிக்கு தனது சேவையை விரிவுபடுத்தியது.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலில் நடமாடும் தடுப்பூசி வழங்கல் முதன்முதலில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு, மலை நாடு உட்பட, நோய்வாய்ப்பட்ட விகிதங்கள் அதிகமாக இருக்கும் மற்ற மாகாணங்களுக்கு இச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வன்னி பிராந்தியத்தில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன் வெற்றுக்காக இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினர் தனது முழு ஒத்துழைப்பினையிம் வழங்குகின்றனர்.
தடுப்பூசி திட்டமானது 21, 54, 56, 62 மற்றும் 65 படைப்பிரிவுகளின் தளபதிகளின் மேற்பார்வையில் அந்தந்த பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டது.