Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2021 11:20:35 Hours

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிகிச்சை நிலையத்திற்கு மின் சாதனங்களை அன்பளிப்பு

கலேவெல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை (27) கலேவெல வைத்தியசாலையின் கொவிட் -19 சிகிச்சை நிலையத்திற்கு தொலைக்காட்சிகள் உட்பட சில மின் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர்.

53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே , கலேவெல பிரதேச செயலாளர், கலேவெல பிரதேச சபை தலைவர் மற்றும் சில அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த உபகரணங்கள் அந்த சிகிச்சை நிலையத்தின் விடுதிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.