27th August 2021 14:00:15 Hours
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பழைய ஆனந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வியாழக்கிழமை (26) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இராணுவ வைத்தியச்சாலையின் கொவிட் பிரிவுக்கு சுமார் ரூபா 825000 பெறுமதியான மல்டிபராமீட்டர் திரையினை அன்பளிப்புசெய்தனர்.
நாட்டில் கொவிட் -19 ஒழிப்புக்காக இராணுவ வீரர்களின் பங்களிப்பில் ஈர்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் நன்கொடையாளர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கிடைக்கச் செய்தனர். நோயாளிகளின் நோயின் தீவிரத்தையும் நோயாளிகளின் முக்கிய அளவுருக்களைக் கண்காணிக்க இது உதவுகிறது. ஈசீஜி, ஸ்போ2, இதய துடிப்பு, இரத்த அழுத்தம், வெப்பநிலை போன்ற நோயாளிகளின் பல தகவல்களைக் காண்பிப்பதற்காக மல்டிபராமீட்டர் திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்கொடையானது கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் கேணல் டாக்டர் சம்பிக்கா அபேசிங்கவினால் பெறப்பட்டது.