27th August 2021 15:00:45 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில், பிரப்பன்மடுவ, மகாகச்சிகொடிய, நந்திமித்ரகம, செளலிஹினிகம, நாமல்கம மற்றும் வீமன்கல்லு கிராமங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தெரண ஊடக அலைவரிசையின் ஒத்துழைப்பில் 1000 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
"தெரன" அலைவரிசையின் "மனுசத் தெரண" எனும் திட்டத்தின் ஊடாக முதலில் நிவாரணப் பொதிகள் நந்திமித்ரகம மற்றும் பிரப்பன்மடுவ கிராமங்களில் 21 ஆகஸ்ட் 2021 அன்று சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டன.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி பெரேரா ஆகயோரின் வழிக்காட்டலின் கீழ் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா, வன்னியின் தலைமை ஒருங்கிணைப்பு சிவில் விவகார அதிகாரி, 56 வது படைப்பிரிவு மற்றும் 563 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரிகள், 21 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் இந்த பொதிகளை விநியோகிப்பதில் பங்குபற்றினர்.