28th August 2021 12:30:09 Hours
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் படையினர் வியாழக்கிழமை (26) ஊவா குடா ஓயா பகுதியில் உள்ள அளுத்வெல பகுதியில் மேற்கொண்டிருந்த கஞ்சா (கஞ்சா) செய்கையினை கண்டுப்பிடித்து அழித்தனர்.
சுமார் 25 பெர்ச் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சட்டவிரோதமாக காடுகளுக்குள் இரகசியமாக பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் 10 மில்லியன் மதிப்புள்ளதாகும். குறித்த இடம் கண்டறியப்பட்டதன் பின்னர் படையினரால் குடா ஓயா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.