28th August 2021 13:00:09 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வடக்கு மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச (FMA- NC) தலைமையகத்தின் புதிய தளபதியாக, இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பிரிகேடியர் பிரியந்த சில்வா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி தலைமையகத்திற்கு வருகை தந்த போது பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.
மத வழிபாடுகள் மற்றும் 'பிரீத்' பாராயணங்ளுக்கு மத்தியில், பிரிகேடியர் பிரியந்த சில்வா புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்பிறகு அன்றைய நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஒரு மாங்கன்றை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வின் போது அனைத்து பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகளும் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பங்குபற்றினர்.
பிரிகேடியர் பிரியந்த சில்வா தற்போதைய நியமனத்திற்கு முன்னர், இராணுவ தலைமையகத்தில் காணி மற்றும் இராணுவ வழங்கல் பணிப்பகத்தின் பணிப்பாளராக இருந்தார். அவர் சமீபத்தில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் எச்.எல் குருகேவுக்குப் பதிலாக இந்நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.