28th August 2021 12:18:09 Hours
சுவாசத் தேவையுடைய மாற்றும் நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை வழங்குவதற்கான ரூபா .1.24 மில்லியன் மதிப்புள்ள ரெஸ்மெட் ஸ்டெல்லர் 100 ஆக்கிரமிப்பு அல்லாத வென்டிலேட்டர் ஒன்றினை கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கொவிட் -19 சிகிச்சை பிரிவுக்கு வியாழக்கிழமை (26) டாக்டர் சித்திரலேகா அபேசிங்க அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த நோயாளிகள், ஆகியோரின் ஒத்துழைப்பில் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது,
இந்த கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வென்டிலேட்டரின் நன்கொடை, இராணுவ வைத்தியசாலையின் நோயியல் நிபுணர் பிரிகேடியர் கீதிகா ஜயவீராவால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
கொழும்பு இராணுவ மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் கேணல் தொங்கொட மற்றும் மயக்க மருந்து நிபுணர் கேணல் சம்பிக்கா அபேசிங்க ஆகியோர் குறித்த நன்கொடையினை பெற்றுக் கொண்டனர்.