Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2021 09:00:39 Hours

புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாவல் படையினர் ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 682 பிரிகேட்டின் இராணுவ புலனாய்வுப் படை (எம்ஐசி) வழங்கிய உளவுத் தகவலின் அடிப்படையில் 6 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையினர் முல்லைத்தீவு பொதுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது 142.2 கிலோ கஞ்சாவை வியாழக்கிழமை (26) புதுமாத்தளன் சாலை பகுதியின் பட்டிகரையில் கைப்பற்றினர்.

முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் கஞ்சா அடங்கிய பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக படையினர் ஒப்படைத்தனர்.

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்புக்கான கொள்கைக்கு ஏற்ப பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களின்படி படையினர் புலனாய்வு துறையினருடன் இணைந்து போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர்.