Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2021 11:00:35 Hours

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகள் 2020 ல் இலங்கை இராணுவம் கஜபா படையின் போர் வீரன் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்று சாதனை

பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புத் சார்ஜன்ட் தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஈட்டி எறிதல் (F46) நிகழ்வில் பங்கேற்ற அவர் 67.79 மீற்றர் தூரம் ஈட்டியினை எறிந்து உலக சாதனை படைத்தார்.

அணியின் தலைவராக டோக்கியோவிற்கு புறப்படுவதற்கு முன்பு, சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் இராணுவத் தளபதியைச் சந்தித்தபோது, நிச்சயமாக இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமையையும் புகழையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார். அதே சமயத்தில், டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் பரா ஒலிம்பிக் வீரர்களுக்கு கடந்த ஓராண்டிற்கும் மேற்பட்ட தொடர்ச்சியான பயிற்சியின் காரணமாக இம்முறை சிறந்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், கிளிநொச்சி பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடியபோது 2008 டிசம்பர் மாதம் 16ம் திகதி எதிரியின் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தார். 2004 மார்ச் மாதம் 18 இராணுவத்தில் இணைந்துக் கொண்ட அவர் சாலியாபுர கஜபா படையணியில் பயிற்சி பெற்றார். அவரது காயங்களுக்குப் பிறகு, அவர் கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பரா தடகள பயிற்சி நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றார். 2012 ஆம் ஆண்டில் இராணுவ பரா தடகள போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் (52 மீ) தங்கம் வென்றார். 2012 இல் மலேசிய பரா தடகள போட்டியில் (52.95 மீ) தங்கப் பதக்கம் வென்றார். ரியோ பரா ஒலிம்பிக் 2016 இல் வெண்கலப் பதக்கம் (58.23 மீ), ஜெர்மனி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 இல் பரா தடகள (தகுதி) (53.09 மீ), லண்டனில் நடந்த உலக பரா தடகள போட்டி 2017 இல் வெள்ளிப் பதக்கம் 59.90 மீ., ஆசிய பரா போட்டிகள் 2018 இல் தங்கப் பதக்கம் 61.84 மீ மற்றும் உலக பரா தடகளம் 2019 ல் வெள்ளிப் பதக்கம் ஈட்டி எறிதல் போட்டியில் 60.59 மீ. பெற்றுக் கொண்டவர்.