Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2021 16:51:15 Hours

முல்லைத்தீவு படையினர் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில்

முல்லைத்தீவு பிரதேசத்தில் திங்கட்கிழமை (23) 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு 57,59, 64, 66 மற்றும் 68 படைப்பிரிவுகளின் படையினர் இராணுவ வைத்திய படையினருடன் இணைந்து நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டங்களை மேற்கொண்டனர்.

தேசிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO), தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் படி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் முல்லைத்தீவு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு உள்ள ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவினால் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தடுப்பூசி வழங்கும் திட்டம் 57, 59, 64, 66 மற்றும் 68 படைப்பிரிவுகளின் தளபதிகளின் மேற்பார்வையில் பிரிகேட் தளபதிகளின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடமாடும் சேவை தேவைப்படும் முதியவர்கள் அந்தந்த உதவி பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகம் அல்லது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றுடன் தேவையான ஒருங்கிணைப்புக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.