Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2021 09:56:47 Hours

கிழக்கு தளபதி 22 படைப்பிரிவு தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய 22 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை பிரிகேட்களான 221, 222 மற்றும் 223 பிரிகேட்களுக்கு 2021 ஆகஸ்ட் மாதம் 19-20 திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.

அவர் முதலில் கந்தளாய் ஜயந்திகம 222 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார், அங்கு பிரதான நுழைவாயிலில் அவரது வாகனத் தொடரணிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றுகையில் அனைத்து நிலைகளினதும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் நாட்டின் தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

பின்னர் தளபதி கட்டைப்பரிச்சான் 223 வது பிரிகேட்டிற்கு விஜயம் செய்த போது பிரிகேட் தளபதி கேணல் ரவீந்திர ஜயசிங்க வரவேற்றார். படையினருக்கு உரையாற்றுகையில் மேற்கூறிய அம்சங்களைப் பற்றி அங்கும் படையினருக்கு அறிவூட்டினார்.

மறுநாள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி திருகோணமலை மாவட்ட செயலாளர் (DS) திரு. சமன் தர்ஷன பண்டிகோரல அவர்களை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சந்தித்து தேசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கிடையே ஒரு பயனுள்ள தொடர்பு தேவை என்பதை வலியுறுத்தி அன்பான கலந்துரையாடல்களை நடத்தினார். பின்னர், தளபதி கும்புறுப்பிட்டி 221 வது பிரிகேட்டின் தலைமையக வளாக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

அத்தோடு மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரேயும் உடனிருந்தார்.