Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2021 10:55:31 Hours

இராணுவ சார்ஜன்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் தலைமையிலான இலங்கையின் பரா ஒலிம்பிக் குழுவிற்கு தளபதியின் வாழ்த்துக்கள்

ஜப்பான் டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகள் - 2020, ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி முதல் செப்டம்பர் 5 ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக இலங்கை தேசிய பரா ஒலிம்பிக் குழுவில் (NPC) ஒன்பது-வலுவான விளையாட்டு வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் ஏழு வீரர்கள் இலங்கை இராணுவத்தை சாரந்தவரகள்.

ஜப்பான் செல்வதற்கு முன்னதாக இலங்கை இலேசாயுத காலாட் படையின் கோப்ரல் எம்ஜி சம்பத் பண்டார (வில்வித்தை), கஜபா படையணியின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் (ஈட்டி), விஜயபாகு காலாட் படையணியின் சார்ஜென்ட் சம்பத் ஹெட்டியாராச்சி (ஈட்டி), இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கோப்ரல் பாலித பண்டார (போடு குண்டு), சிறப்புப் படையணியின் பணிநிலை சார்ஜன்ட் மகேஷ் ஜெயக்கொடி (படகோட்டல்), இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜென்ட் ரஞ்சன் தர்மசேன (ஈட்டி), இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கார்ப்ரல் சமித துலன் (ஈட்டி) ஆகிய போட்டியாளர்களுடன் பயிற்றுவிப்பாளர்கள், முகாமையாளர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை (19) பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் தேசிய விளையாட்டு தேர்வுக் குழு தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து அவரது அறிவுறுத்தல்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுரைகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பரா ஒலிம்பிக் போட்டிகளில் தடக் கள, படக்கொட்டுதல், வில்வித்தை மற்றும் சக்ர நாட்காலி டெனிஸ் போன்ற போட்டிகளில் உலகம் தொற்றுநோய் அச்சுறுத்தலில் இருக்கும் வேளையில் பங்குபற்றும் அந்த விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். லண்டன் (2012) மற்றும் ரியோ டி ஜெனிரோ (2016) ஆகிய இரண்டு பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சிறப்பாக செயல்பட்டதால் இந்த பங்கேற்பை தொற்றுநோய்க்கு மத்தியில் ஆதரிப்பதில் இராணுவம் பெருமை கொள்கிறது. டோக்கியோ பரா ஒலிம்பிக் அமைப்பாளர்களால் குறிப்பிடப்பட்ட அனைத்து சுகாதார விதிமுறைகளுக்கும் உட்பட்டு, ஆகஸ்ட் 20 ஆம் திகதி இலங்கை அணி நாட்டிலிருந்து வெளியேறும். மேலும் இந்த அணி போட்டியின் முழு காலத்திலும் உயிரியல் குமிழியில் இருக்கும் என்று இராணுவத் தளபதி கூறினார்.

கடந்த ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவத்தின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் ஒன்பது பேர் கொண்ட டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் இலங்கை அணிக்கு தலைமை வகிப்பார்.

பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோலா, தேசிய பரா ஒலிம்பிக் குழு (NPC) தலைவர் லெப்டினன்ட் கேணல் தீபால் ஹேரத், செயலாளர் பிரிகேடியர் பந்துல பண்டார, பிரதி தலைவர் பிரிகேடியர் தனஞ்சய அலுதெனிய, மற்றும் இன்னும் சில அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது தளபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகள் -2020 22 விளையாட்டுகளில் 539 பதக்கங்களுக்காக சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து பங்குபற்றும் ஆறு விளையாட்டு வீரர்களும் இருவர் நேரடித் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரம் ஒரே பெண் போட்டியாரோன குமுது பிரியங்கா டோக்கியோ போட்டிக்கு உலகலாவிய ரீதியில் தகுதி பெற்றார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் அறிமுகமானதிலிருந்து இலங்கையின் பரா ஒலிம்பிக் போட்டியாளர்கள் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர், தடகள வீரர்கள் பிரதீப் சஞ்சய (லண்டன் 2012) மற்றும் தினேஷ் பிரியந்த ஹேரத் (ரியோ 2016) மூலம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வெல்லப்பட்டுள்ளன.