Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2021 12:00:46 Hours

யாழ்ப்பாணத்தில் உயிர் நீத்த இந்திய போர் வீரர்களுக்கு இந்திய சுதந்திர தினத்தன்று அஞ்சலி

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் இந்திய அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் இந்தியாவின் 75 வது சுதந்திரமான 15 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரு. ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் ஒன்றிணைந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.