18th August 2021 18:30:50 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் கீழுள்ள 642 வது பிரிகேடின் 23 வது விஜயபா காலாட் படை சிப்பாய்களால் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரியொருவர் மற்றும் அவருடன் அமெரிக்காவில் பணியாற்றும் நண்பர்கள் இணைந்து வழங்கிய நன்கொடையின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (17) முல்லைத்தீவு பகுதியில் அங்கவீனமுற்றவர்களுக்காக 15 சக்கர நாட்காளிகள் வழங்கி வைக்கப்பட்டன.
திட்டத்தின் முதலாவது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் தலைமையில் பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று சக்கர நாட்காலிகளுடன் உலர் உணவு பொதிகளும் விநியோகிக்கப்பட்டன. அதே முறையில் ஏனைய 14 நாட்காலிகளும் படையினரால் விநியோகிக்கப்பட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆர் ரத்னசிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் குழுவால் மேற்படி மனிதாபிமான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளினதும் கிராம சேவகர்கள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளினால் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.