Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2021 18:00:13 Hours

பொறியியல் படைகளின் பொது மைதான மறுசீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில்

12 (தொ) பொறியியல் சேவை படையணி சிப்பாய்களினால் தற்போது மேற்கொள்ளப்படும் களுத்துறை மாவட்டத்தில் 7 வது மைல்கல் பகுதியிலுள்ள உள்ள யட்டபாத்த பொது விளையாட்டு மைதானத்தின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அத்தொடு 5 வது கள பொறியியல் படையினரால் மைதானத்தின் பார்வையாளர் அரங்கத்தை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன. பொது பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்களின் மேற்பார்வையில் நடைப்பெறும் இத்திட்டங்களின் கட்டுமான பணிகள் அண்மையில் மேற்பார்வை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் 08 விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஒரு பொது மைதானத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் 7 வது கிராமத்துடன் சுமூகமான கலந்துரையாடல் என்ற திட்டத்தின் கீழ் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி யட்டபாத்த பகுதியில் 23 ஜனவரி 2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட 9 மைதானங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் தற்போதும் 4 மைதானங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மேற்படி திட்டங்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தலைமை கள பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மைதானங்களின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவை எட்டியுள்ளன.

இத்திட்டத்தின் மொத்த செலவு 7 மில்லியன் ரூபாய்கள் என்பதுடன் ஜனாதிபதி செயலகம் மற்றும் களுத்துறை மாவட்ட செயலகத்தின் நிதி உதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.